Home இலங்கை அரசியல் தமிழினத்தை அழித்த விசக்கிருமி தான் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம்

தமிழினத்தை அழித்த விசக்கிருமி தான் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம்

0

சுமந்திரன் (M. A. Sumanthiran) என்கின்ற விசக்கிருமி தான் என்னுடைய தமிழ் தேசத்தை, தமிழினத்தை அழிக்கின்றது.

தமிழினத்தின் எதிர்கால சிந்தனையை சிதைக்கின்றது என தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனி மனித இலாபத்திற்காகவும் சக்தியைக் காண்பிப்பதற்காகவும் அரசியல் செய்யும் சுமந்திரன் ஒரு இனத்தை அழிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது என அவர் மேலும் சுட்டிக்காட்டிள்ளார்.

பொது வேட்பாளர் விடயம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”இந்த தேசம் அரசியல் கட்டமைப்பில்லாத தேசமாக இருப்பதற்கு காரணம் சுமந்திரனே.

தமிழ் தேசிய அரசியிலில் இருந்து சுமந்திரன் எப்போது நீக்கப்படுகின்றாரோ அப்போது தான் மீள்கட்டுமான அரசியலை உருவாக்க முடியும்.

தமிழ் தேசியக் கூட்மைப்பை சின்னாபின்னமாக உடைத்தவர் தமிழரசுக்கட்சியை துண்டுதுண்டாக வெட்டி நீதிமன்றத்தில் வைத்திருக்கின்றார்.

தமிழரசுக்கட்சியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது சுமந்திரனுக்கு மட்டுமே தெரியும்.

பொது வேட்பாளர் விடயத்தில் சுமந்திரன் காட்டிய எதிர்ப்பும் விமர்சனமும் தான் பொது மக்கள் அரியநேத்திரனை (Ariyaneththiran) இவ்வளவு தூரம் ஆதரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இம்முறை இடம்பெறவுள்ள தேர்தல் சிங்கள தேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் ஒரு பலத்த சவாலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர்களுக்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டு வாக்குகள் சிதறடிக்கப்படுகின்றமையால் தமிழ் மக்களுடைய வாக்குகள் தேவையாக இருக்கின்றது.

தமிழர்களுடைய தீர்வு இன்றைய சூழலில் முக்கியமாக இருக்கின்ற நிலையில் ஆரம்பத்தில் மந்த நிலையில் இருந்தது.

தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியதும் ஒரு சில நபர்கள் குழப்பநிலை உருவாக்கியதுடன் அந்த குழப்பம் இன்று தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழர் தாயக தேசமெங்கும் ஒருமித்த நிலைப்பாட்டிற்குள் வந்துள்ளதுடன் தேசியம் என்ற மையப்புள்ளியில் இணைந்துள்ளனர்.“ என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/gmN_cVFgvgI

NO COMMENTS

Exit mobile version