Home முக்கியச் செய்திகள் விரைவில் நாடாளுமன்றம் செல்லவுள்ள சுமந்திரன் – கேள்விக்குறியுள்ள சிறீதரனின் பதவி

விரைவில் நாடாளுமன்றம் செல்லவுள்ள சுமந்திரன் – கேள்விக்குறியுள்ள சிறீதரனின் பதவி

0

சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விரைவில் பறிக்கப்படும் என்றும் எம். ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran ) இன்னும் ஆறு மாதங்களில் நாடாளுமன்றம் செல்வார் என அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தனக்கு சார்பாக செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தலைவராக சிறீதரன் இருக்கும் நிலையில் அதை விடுத்து சி. வி. கே. சிவஞானம் தெரிவு செய்துள்ளமை இதை எடுத்துக் காட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை சிறீதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

இது தொடர்பில் அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான ஜோதிலிங்கம் தெரிவித்த விரிவான கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்…..

https://www.youtube.com/embed/2RQDofa7H7o

NO COMMENTS

Exit mobile version