Home இலங்கை அரசியல் சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்

சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்

0

நீண்ட காலம் தமிழ் மக்களுக்கு இணையில்லாத தலைவராக மக்களை வழிகாட்டியவரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் ஒரு மூத்த அரசியல்வாதியின் இழப்பாக உள்ளது.

இந்நிலையில், அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் நாளை காலை 9 மணியிலிருந்து மக்களது அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் நாளை மறுநாள் (03) நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அனுதாபங்கள்

இதனைத் தொடர்ந்து சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

மேலும் இறுதிக்கிரியைகள் குறித்து குடும்பத்தார் தகவல் வெளியிடவில்லை எனினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version