இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
சந்தோஷ் ஜாவுக்கும்(Santosh Jha), இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும்(M. A. Sumanthiran) இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது கொழும்பில் நேற்று (12.06.2024) நடைபெற்றுள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை
இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி உட்பட்ட இரு தரப்பு இணைப்பு சம்பந்தமான பல தரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
High Commissioner @santjha met Hon. MP @MASumanthiran today. Exchanged views on current political situation in Sri Lanka as well as various facets of bilateral partnership, including development in the Northern and Eastern Provinces of Sri Lanka. pic.twitter.com/JZa3POQDxA
— India in Sri Lanka (@IndiainSL) June 12, 2024