Home இலங்கை அரசியல் பலமான தரப்பிடம் ஆலோசனை நடத்தாமல் முடிவை அறிவித்த சுமந்திரன்

பலமான தரப்பிடம் ஆலோசனை நடத்தாமல் முடிவை அறிவித்த சுமந்திரன்

0

பலமான தரப்பிடம் ஆலோசனை நடத்தாமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எட்டப்பட்டுள்ளதாக வடக்கு அரசியல் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில் சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம் எனவும், அரியநேத்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும் அக்கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எ சுமந்திரன் அறிவித்திருந்தார்.

இந்த செய்தி வெளிவந்த சிறிது நேரத்தில், இது கட்சியின் முடிவல்ல என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்த ஆதரவு அறிவிப்பில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி
மற்றும், திருகோணமலை மாவட்ட குழுக்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாகவும், சஜித்தின் ஆதரவை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளன.

மேலும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கலையரசன் உள்ளிட்ட 3 பேர் சஜித்துக்கு ஆதரவழைப்பதில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த விடயத்தில் உற்றுநோக்கவேண்டிய மற்றுமொரு விடயம் இந்தியாவின் நிலைப்பாடு.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் நிலைமைகளை ஆராயும் பொருட்டு இலங்கை வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தமிழ் தேசியத்தின் தலைவர்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருந்தார்.

இதில், தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது அஜித் தோவல் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்றும் தான் கருதுவதாக அவர் விளக்கியிருந்தமையும் நோக்கத்தக்கது.

மாறுபட்ட கொள்கை

இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இத்தகைய மாறுபட்ட கொள்கைகளை உடைய தமிழ் தரப்பு எம்.பிக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த தோவால், சில விளக்கங்களை அவர்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த சுமந்திரனுக்கு , தென்னிலங்கை அரசியலோடு நகர ஒரு வலியுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், அவருக்கு ஆலோசனை வழங்கியும் இருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதால் இந்த பேரம் பேசலை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதன் பின்னர் சிறந்த தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைப்பவரை ஆதரிப்பது குறித்துத் தீர்மானிக்கமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

இதன் பின்னணிகளில் நேற்று சுமந்திரனால் தமிழரசு கட்சி என்ற போர்வையில் ஆதரிக்கப்பட்ட சஜித்தின் தேர்தல் விஞ்சாபன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு ஒரு வசனம்

இதில் ஆண்டாண்டு காலம் உரிமைக்காக போராடும் தமிழ் மக்களுக்கு ஒரு வசனம் உள்ளதா என்பதை அறிந்துகொள்வோம்.

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்

• வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்

• கடன் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியம்

• நிதி மற்றும் பரிமாற்ற விகித கொள்கை

• வருமான வளர்ச்சியை அடைதல்

• செலவுக் கட்டுப்பாடு

• பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்

• அரசுத்துறை முகாமைத்துவ மற்றும் டிஜிட்டல்மயமாக்கல்

• வலுசக்தி மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தங்கள்

• உற்பத்தி காரணி சந்தை சீர்திருத்தம்

• கமத்தொழில், மற்றும் கால்நடை அபிவிருத்தி

• காணி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம்

• போக்குவரத்து – நெடுஞ்சாலை, கடல் மற்றும் ஆகாயம்

• மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள்

• சுற்றுலாத் துறை

• விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

• கைத்தொழில் துறை

• சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறை

• இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறை

• நிர்மாணத்துறை

• மின்சக்தி மற்றும் வலுசக்தி

அனைத்து பிரஜைகளையும் வலுப்படுத்தல்

• கல்வி, தொழில்முறை பயிற்சி மற்றும் இளைஞர்கள்

• மகளிர் மற்றும் சிறுவர் வலுப்படுத்தல்

• சுகாதாரம், போசாக்கு, சுதேச மருத்துவம் மற்றும் சமூக நலன்

• வலுப்படுத்தல் மற்றும் சுபீட்சத்தைக் கட்டியெழுப்புதல்

• மாற்றுத்திறனாளிகள்

• ஆதிவாசிகள் சமூகம்

• விளையாட்டுத்துறை


அரச துறையை மேம்படுத்தல்

• இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு ஏற்ற டிஜிட்டல் இலங்கை

• திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கம்

• அரசாங்க சேவை

• கடவுச்சீட்டு வரிசை முடிவுக்கு கொண்டு வருதல்


வாழ்க்கை தரத்தை பாதுகாத்தல்

• மத மற்றும் கலாச்சார விவகாரங்கள்

• ஊடகம்

• வீட்டமைப்பு மற்றும் பொது வசதிகள்

• புலம்பெயர்ந்த ஊழியர்கள் மற்றும் வேலை வாய்ப்பு

• மலையக மக்கள்

• ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல்

• ரணவிரு (போர் வீரர்) நலன்

• வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல்


தேசிய பாதுகாப்பு

• ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல்

• வெளிநாட்டு உறவுகள் மற்றும் வர்த்தகக் கூட்டணிகள்

• தேசிய பாதுகாப்பு

• சட்டம் மற்றும் ஒழுங்கு

• ஊழல் எதிர்ப்புச் சட்டம்

• போதைப்பொருட்கள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தல்.

• நிலைபெறுதகு சுற்றாடல்   

   

NO COMMENTS

Exit mobile version