Home இலங்கை அரசியல் தேர்தலில் தோல்வியடைந்தாலும் சுமந்திரனுக்கு ஆசனம் உறுதி: தவராசா வெளிப்படை

தேர்தலில் தோல்வியடைந்தாலும் சுமந்திரனுக்கு ஆசனம் உறுதி: தவராசா வெளிப்படை

0

தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் மறைமுகமாக அது சுமந்திரனுக்கு தான் செல்லும் எனவே சுமந்திரன் (M. A. Sumanthiran) தோல்வியடைந்தாலும், தேசிய பட்டியல் மூலம் உள்ளே செல்வார் என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவரான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழில் நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கட்சி எப்படி போனாலும் பரவாயில்லை, சுமந்திரனுடைய ஒரே ஒரு எதிர்ப்பார்ப்பு தமிழரசு கட்சியின் தலைமை பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும்.

சிறீதரன் (S. Shritharan) கட்சிக்கு தலைவராவது கனவு, அதற்கு சுமந்திரனும் அவரது சகாக்களும் என்றும் இடமளிக்கமாட்டார்கள்.

சிறீதரன் அவரது வாழ்விலே ஒரு மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்.

தமிழ் தேசியம் வேண்டுமா, அழிவு பாதைக்கு செல்ல வேண்டுமா என்பதை மக்களிடமே விட்டு விடுகின்றேன், மக்கள் தீர்மானிப்பர்.” என்றார் 

https://www.youtube.com/embed/-bLZQ-7CNuw

Source: https://ibctamil.com/article/sumathiran-aims-for-tna-leadership-role-1729448624

NO COMMENTS

Exit mobile version