Home இலங்கை அரசியல் சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வதற்கு விரைவில் புதிய நகர்வு!

சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வதற்கு விரைவில் புதிய நகர்வு!

0

தமிழரசுக்கட்சியின்(Itak) பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியலினூடாக தெரிவுசெய்தமையானது சுமந்திரனை(M.A.Sumanthiran) நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தந்திரோபாயமாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் மதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“தேசிய பட்டியலுக்கான பெயர் பட்டியல் உறுப்பினர்களை முன்னதாகவே கொடுக்காதது சுமந்திரனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான உத்தியாக கூட இருக்கலாம்.

தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும், சத்தியலிங்கம் நடுநிலையானவர் அல்ல, அவர் ஒரு குழு சார்ந்து செயற்படக் கூடியவர்.

சுமந்திரன் மீதான வெறுப்பே தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணம்.

தாம் நினைக்கின்ற விடயங்களை எடுத்து நடத்தக்கூடிய விடயங்களில் சுமந்திரன் வல்லவர் என குறிப்பிட்டுள்ளார். 

சம்பந்தனின் பதவியையும், அவரின் வயது மூப்பையும் அவர் தனக்கு சாதகமாக சுமந்திரன் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…

NO COMMENTS

Exit mobile version