Home இலங்கை சமூகம் அடம்பிடிக்கும் ராஜித – அடுத்தடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவு

அடம்பிடிக்கும் ராஜித – அடுத்தடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவு

0

கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை (Rajitha Senaratne) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 29 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான்

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார். 

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைகளை சட்டவிரோதமாக கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் 262 லட்சம் ரூபா இழப்பை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு ஆணைக்குழுவினால் பல்வேறு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து ராஜித சேனாரத்ன வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தரவில்லை.

இந்நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு ராஜிதவை கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version