Home இலங்கை அரசியல் அநீதிக்குத் தலைவணங்க மாட்டோம்! ராஜிதவின் புதல்வர் வலியுறுத்தல்

அநீதிக்குத் தலைவணங்க மாட்டோம்! ராஜிதவின் புதல்வர் வலியுறுத்தல்

0

எந்தவொரு கட்டத்திலும் தமது குடும்பம் அநீதிக்குத் தலைவணங்காது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வர் சதுர சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றத்திலோ, இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடித் தடுப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கோ முன்னிலையாகாமல் இருப்பது குறித்து அவரது புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

எந்தவொரு கட்டத்திலும் அநீதிக்கு

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாங்கள் யாருக்கும் அஞ்சி ஓடி ஒளிய மாட்டோம்.

எந்தவொரு கட்டத்திலும் அநீதிக்குத் தலைவணங்கவும் மாட்டோம்.

நீதிக்குத் தலைவணங்குவோம். அதன் காரணமாகவே இன்றளவும் நீதிமன்றத்துக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றோம்.

நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் உண்டு என்றும் சதுர சேனாரத்ன தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version