சின்னத்திரை சீரியல்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சன் டிவி vs விஜய் டிவி இடையே தான் டிஆர்பி ரேட்டிங்கில் போட்டி இருந்து வருகிறது.
முக்கிய சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுகொண்டு ரசிகர்களை கவர்வதற்காக புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
முடியும் சீரியல்
இன்று முதல் சன் டிவியில் செல்லமே செல்லமே என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது சன் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் ஆனந்த ராகம் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் அந்த தொடரின் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். பிற்பகல் 3 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
