Home சினிமா தெலுங்கு திரையுலகை பழிவாங்க நினைந்த இயக்குனர் சுந்தர் சி.. காப்பியடித்து எடுத்த திரைப்படம்

தெலுங்கு திரையுலகை பழிவாங்க நினைந்த இயக்குனர் சுந்தர் சி.. காப்பியடித்து எடுத்த திரைப்படம்

0

சுந்தர் சி

ஒரு சில படங்கள் மட்டும் தான் எப்போது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அப்படிப்பட்ட திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. அன்பே சிவம், உள்ளத்தை அள்ளித்தா, வின்னர், கலகலப்பு ஆகிய படங்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்த சுந்தர் சியின் இயக்கத்தில் அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படம் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், அரண்மனை 4 படத்திற்கான ப்ரோமோஷன் பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி, பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார். அப்படி தெலுங்கு திரையுலகம் தன்னை அதிர்ச்சியடைய செய்த சம்பவம் குறித்தும் பேசினார்.

தெலுங்கு திரையுலகம் கொடுத்த ஷாக் 

இதில் “தயாரிப்பாளர் ஒருவர் படம் பண்ணலாம் என என்ன அழைத்தார். அப்போது ஹிட்டான தெலுங்கு திரைப்படங்களை ரீமேக் செய்யலாம் என கூறினார். அதனால் நானும் அந்த தெலுங்கு படத்தை பார்த்தேன். அப்படத்தை பார்க்கும் போது அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் என்னுடைய மூன்று திரைப்படத்தை காப்பியடித்து அந்த ஒரு தெலுங்கு படத்தை எடுத்திருந்தனர்”.

நடிகை குஷ்பூவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாத நிலை உருவானது! உண்மையை கூறிய கணவர் சுந்தர் சி

“இதனால் எனக்கு மிகவும் கோபம் வந்தது. சரி, ஒரு திரைப்படத்தை காப்பியடித்து எடுத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், என்னுடைய மூன்று திரைப்படங்களை காப்பியடித்து ஒரே திரைப்படமாக எடுத்துள்ளனர். தெலுங்கு திரையுலகம் மீது எனக்கு செம வெறி வந்துவிட்டது. தெலுங்கு திரையுலகத்தை நான் எப்படி பழிவாகுகிறேன் என்று பாருங்க என கூறி தெலுங்கில் இருந்து படத்தை காப்பியடித்து தமிழில் படம் எடுக்க முடிவு செய்தேன், அது தான் வின்னர்”.

காப்பி

அதுவும் ஒரு படம் இல்லை 10 படங்களின் டிவிடி பார்த்து, வின்னர் படத்தை எடுத்துள்ளார் சுந்தர் சி. “என்னதான் காப்பியடித்தாலும், ஒரே மாதிரியாக இருக்க கூடாது என்று எண்ணி சில மாற்றங்களை கொண்டு வந்தேன். ஹீரோயின் காப்பாத்துங்க என்று கூறியவுடன் ஹீரோ ஓடி வந்து காப்பாற்றும் பொழுது வாழைப்பழ தோளில் கால் வைத்து வலிக்கு விழுவார். இதை இப்படியே வைக்க முடியாது என்று சற்று மாற்றினேன்”.

“அதில் ஒரு காட்சி தான் வின்னர் படத்தில் கதாநாயகி ஆபத்தில் இருப்பது போல் கத்தியவுடன், காப்பாற்ற நடிகர் பிரஷாந்த் ஓடி வருவார். அப்போது குறுக்கே வடிவேலு ‘வந்துட்டேன்’ என கத்திகொண்டே ஓடி வந்து அந்த கோலிக்குண்டுகள் இருக்கும் Mat மீது கால் வைத்து, ஒரு பந்து போல் அங்கும் இங்கும் அடிவாங்கி கீழே விழுவார். இப்படி தான் அந்த காட்சியை நான் மாற்றி அமைத்திருந்தேன்”.

தெலுங்கு சினிமாவின் தக் லைப் 

“இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பிறகு, சில நாட்கள் கழித்து நான் ஒரு தெலுங்கு படத்தின் காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த தெலுங்கு திரைப்படத்தில் வின்னர் படத்தில் வடிவேலு வலிக்கு விழும் காட்சியை அப்படியே காப்பியடித்து வைத்திருந்தனர்”.

“நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சற்று மாற்றியமைத்து வைத்திருந்தேன். ஆனால், அது தெரியாமல், வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து அவர்கள் ஒரு படத்தை எடுத்துள்ளனர், அப்போது முடிவு செய்து என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்” என நகைச்சுவையாக பேசினார். 

NO COMMENTS

Exit mobile version