தேசிய ஜனநாயக கட்சி இந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அநுரகுமார
திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானிதுள்ளதுடன் வெற்றிபெறும் அநுரவுக்கு
தமிழ் மக்கள் வாக்களித்து ஆதரவு வழங்க வேண்டும் என கட்சியின் தலைவர் நாரா
அருண்காந் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று(16) இடம்பெற்ற தேசிய ஜனநாயக கட்சியின்
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஊழல் அற்ற ஆட்சி
“தேசிய ஜனநாயக கட்சி கடந்த 6 வருடங்களாக மக்கள் மத்தியில் பணியபற்றிவருகின்றது.
இருந்தபோதும் இந்த நாட்டிலே ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற
நோக்கத்தோடு இந்த முறை மாற்றாக சிந்தித்து இந்த ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்க தீர்மானித்தோம்.
கடந்த 4 தேர்தல்களை அவதானித்தால் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக போட்டியிட்ட
ரணிலை தோற்கடிக்க வேண்டும் என வடக்கு கிழக்கிலே மிகப் பெரும் குரல்
எழுந்ததையடுத்து ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்ததுடன் மகிந்த ராஜபக்ச வெற்றி
பெற்றார்.
அதனை தொடர்ந்து, சரத் பொன்சேக்காவை ஜனாதிபதியாக்க வேண்டும் என சிறுபான்மை
மக்கள் மீண்டும் ஒரு தவறான முடிவை எடுத்தனர்.
ஆனால் அந்த தேர்தலில் பொன்சேக்கா தோல்வி அடைந்தபோதும் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்.
ஆகவே தமிழ் மக்களின் வாக்குகள் இரண்டாவது முறையாக வீணடிக்கப்பட்டது.
மூன்றாவது முறை தேர்தலிலே தமிழ் மக்கள் ராஜபக்ச இனிமேல் தொடர்ந்து ஆட்சியில்
இருப்பார்கள் என இன்னும் ஒரு தவறான முடிவெடுத்து அவருக்கு
வாக்களித்தபோதும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.
இவ்வாறு தமிழ் மக்கள் எடுக்கின்ற தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி
இருக்கின்றது காரணம் உணர்வு பூர்வமாக முடிவெடுத்தல் காரணமாக கடந்த 15 வருடமாக
வாக்குகள் வீணடிக்கப்பட்டது.
எமது மக்களுக்கு ஊழல் அற்ற ஆட்சியை கொடுப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார கலாச்சார பண்பாடு மற்றும்
அபிவிருத்தியை மேற்கொள்ள பலமாக அமையும் என்ற காரணத்துக்காக நாங்கள் தேசிய
மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.
ஏனவே எமது மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்து சம்மேளனம் அநுரவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்குமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.