Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு : இந்து மத பீட செயலாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு : இந்து மத பீட செயலாளர் அறிவிப்பு

0

இரண்டாம் உலக இந்து மாநாட்டை தலைமை தாங்கி நடாத்தி இந்துக்களுக்கு பெருமை சேர்த்த
ரணிலுக்கே எமது ஆதரவு என முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளரும் சர்வதேச இந்துமத பீட செயலாளருமான கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி வன்முறையற்ற அமைதியான முறையில் தீர்வை பெறுவதற்கு முயற்சி செய்தவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ”இலங்கையின் முன்னாள் இந்து கலாசார அமைச்சராக இருந்த மகேஸ்வரன் (Maheswaran) காலத்தில் இரண்டாம் உலக இந்து மாநாடு உலக மக்கள் வியக்கும் வண்ணம் மிகவும்
சிறப்பாக நடைபெற்றது.

தலைமை தாங்கிய ரணில் 

அந்த மாநாட்டின் போது இப்போதைய
ஜனாதிபதியும் அப்போதைய பிரதமரமாக இருந்த ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கி
அங்குரார்ப்பண நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதன்போது அந்தண பெருமக்கள் புடைசூழ வேத மந்திரம் முளங்க மங்கள
வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு அந்த நிகழ்வில் கலந்துகொண்டு இந்து மாநாட்டை
சிறப்பித்து இருந்ததை ஒருபோதும் இந்து மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதேபோல
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்தில்
பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்த வேளையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கையை ஏற்பாடு செய்து யுத்த நிறுத்தத்தை
ஏற்படுத்தி வன்முறையற்ற அமைதியான முறையில் தீர்வை பெறுவதற்கு முயற்சி செய்தவர்
என்பதையும் தமிழ் மக்கள் ஒருபொழுதும் மறக்க மாட்டார்கள்.

வரிசை யுகம் 

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் முடங்கியிருந்த வேளை எரிபொருளுக்கும்
எரிவாயுவிற்கும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றபோது இக்கட்டான சூழ்நிலையில்
நாடு ஜனநாயகத்தை இழந்து கொண்டிருக்கின்ற வேளையில் துணிந்து பிரதமராக
பதவியேற்று மக்கள் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

தனது துணிச்சலான நடவடிக்கைகளின் மூலமும் தீர்க்கதரிசனமான சிந்தனைகளின் மூலமும்
பொருளாதாரப் பிரச்சினைக்கு ஓரளவு சுமூகமான தீர்வை கண்டு இன்று வரிசை இல்லாமல்
செய்துள்ளார். மக்களின் பட்டினியைப் போக்குவதற்கு அஸ்வெசும திட்டத்தை கொண்டு வந்து
மக்களுக்கு உரிய கொடுப்பனவை மானிய முறையில் உதவி செய்திருந்தார்.

இன்று நாடு முழுவதும் பசி பட்டினியின்றி ஓரளவுக்கு பொருளாதாரத்தை
முன்னேற்றுவதற்கு வழியை திறந்து விட்ட பெருந்தலைவர் ரணில் விக்ரமசிங்கவே,  அவருக்கு இந்துக்களாகிய நாங்கள் நிச்சயம் முழு மனதுடன் ஆதரவு
கொடுப்பதோடு வடகிழக்கிற்கு நல்லதொரு தீர்வையும் தருவார் என்ற நம்பிக்கையோடு
ஆதரவை வழங்குவோம்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version