Home இலங்கை அரசியல் மகிந்த ஆட்சியின் நிழலில் மறைந்திருந்த ஆதரவு! அம்பலமாகும் பிள்ளையான் குழுவின் மர்மங்கள்

மகிந்த ஆட்சியின் நிழலில் மறைந்திருந்த ஆதரவு! அம்பலமாகும் பிள்ளையான் குழுவின் மர்மங்கள்

0

கிழக்கில் இயங்கிய பிள்ளையான் குழு மீது படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சதி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2025இல் மட்டக்களப்பில் பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் (Colt MK18 1 M203) கைப்பற்றப்பட்டதாகவும், இவை முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிள்ளையான் ஆயுதக் குழு, இலங்கையின் உள்நாட்டுப் போரின் சிக்கலான அரசியல் மற்றும் ஆயுத மோதல்களின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

சிறிலங்கா அரசின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராகச் செயல்பட்ட இந்தக் குழு, பல குற்றச்சாட்டுகளால் சர்ச்சைக்கு உள்ளானது.

இதன் தலைவரான பிள்ளையானின் அரசியல் மற்றும் ஆயுத நடவடிக்கைகள், இலங்கையின் அரசியல் களத்தில் தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ளன.

இந்த பிள்ளையான் குழுக்களின் நகர்வுகள் சாதாரணமானது அல்ல என்றும் அவை அப்போதைய அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இயங்கியுள்ளது எனவும் பல குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

அவ்வாறென்றால் இதன் காரணகர்த்தா யாராக இருக்கக்கூடும்? மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்த பிள்ளையானுக்கு எவ்வாறான ஆதரவுகள் கிடைத்திருக்க கூடும் என்பதை ஆராய்கிறது இன்றைய ஐ.பி.சி தமிழின் சக்கர வியூகம்…

https://www.youtube.com/embed/NkUdQMFWnBo

NO COMMENTS

Exit mobile version