நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்கள் மலையகம் குறித்து எவ்வாறான
வாக்குறுதிகளை வழங்குகின்றனவோ அதற்கமையே இந்த தேர்தலில் போட்டியிடும்
கட்சிக்கு ஆதரவு வழங்கப் போவதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன்
செந்தூரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தமது ஆதரவு வழங்குவது
தொடர்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில்
எங்களது கட்சி ஜனாதிபதி அநுரகுமாரவை ஆதரித்தது. அதில் அக்கட்சி
வெற்றியும் பெற்றது.
ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எமது
கட்சியின் சார்பில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொண்ட போதிலும் எமக்கு வாய்ப்பு
பெற்றுக்கொடுக்கவில்லை.
எனினும் அது தொடர்பில் நாம் கவலையடையவில்லை.
இருப்பினும் எதிர்காலத்தில் மலையகத்தில் எவ்வாறான சேவைகள் இடம்பெறப்போகின்றன
என்பது தொடர்பாக நாங்கள் விழிப்பாகவே இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,