Home இலங்கை அரசியல் ரொக்கட் மேன் எங்கே! மீண்டும் கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர்

ரொக்கட் மேன் எங்கே! மீண்டும் கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர்

0

சர்ச்சைக்குரிய சுப்ரீம்சாட் விவகாரம் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்றையதினம்(9) பொலன்னறுவையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் மீண்டும் ஒருமுறை கருத்து
தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம், 2012 மே மாதத்தில் நிறுவப்பட்டதாக தகவல் உள்ளது.

ரொக்கெட் மேன் 

ஆனால் அதே
ஆண்டு நவம்பரில் 12,000 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஒரு செயற்கைக்கோள்
ஏவப்பட்டதாக அவர் கூறினார்,
செயற்கைக்கோளின் கணக்குகள் 2014-15 நிதிநிலை அறிக்கைகளில் பிரதிபலிக்கவில்லை
என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில், முறையான கேள்விப்பத்திர செயல்முறை இல்லாமல் நாட்டின்
செயற்கைக்கோள் இடத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமைகள், நிறுவனத்திற்கு எவ்வாறு
வழங்கப்பட்டன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் ரொக்கெட் மேன் இப்போது எங்கே என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், அவரை
இலங்கையின் முதல் விண்வெளி விஞ்ஞானி என்று பலர் அழைத்ததாகவும்;
குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில் ரொக்கெட்டுகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர்
கூறியதாகவும், தமக்கு சொல்லப்பட்டதை மாத்திரமே தாம் மீண்டும் சொன்னதாகவும்
கூறப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version