Home இலங்கை அரசியல் அநுர தரப்பினர் மாகாணசபை தொடர்பாக வெளிப்படுத்தி வரும் கருத்துக்கு பதிலளிக்கும் முன்னாள் எம்பி

அநுர தரப்பினர் மாகாணசபை தொடர்பாக வெளிப்படுத்தி வரும் கருத்துக்கு பதிலளிக்கும் முன்னாள் எம்பி

0

தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கை ஒன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அதற்கான தேர்தல் விரைவாக நடத்தப்படும் என்றும் அதிலுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியினாலும் அவருடன் இருக்கக்கூடிய ஏனைய கட்சி உறுப்பினர்களாலும் பிரசாரம் செய்யப்பட்டது.

வேறுபல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் மேற்கண்ட உறுதிமொழியானது முக்கியத்துவமானதும் முதன்மையானதுமாகும்.
புதிதாக வந்திருக்க்கூடிய அநுர அரசாங்கமானது இனவாதம் மதவாதம் போன்றவற்றிற்கு இந்த நாட்டில் இடமில்லை என்று கூறுகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அவர்களுக்குக் கிடைத்த நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற சாரப்படவும் பேசுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version