சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.
விஜய்யின் மின்சார கண்ணா பட ஹீரோயினை ஞாபகம் இருக்கா?.. ஆளே மாறிட்டாரே
அதை தொடர்ந்து தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
ஹேப்பி நியூஸ்
இந்நிலையில், சூர்யா 45 படம் குறித்து சாய் அபயங்கர் சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார். அதில். ” சூர்யா 45 திரைப்படம் சூப்பராக போய்க்கொண்டிருக்கிறது. நான் படம் பார்ப்பதற்கு முன்பே படம் பற்றி என்ன யோசனை வருகிறதோ அதற்கு ஏற்ப இசையமைத்துவிடுவேன்.
பின், அவை அனைத்தையும் மிக்ஸ் செய்வேன். சூர்யாவின் இந்த படம் மாஸாக எப்படி இருக்க வேண்டும் என்பது நமது மனதுக்குள் இருக்கும்.
அதனால் சூர்யா 45 படத்தில் கண்டிப்பாக ஃபேன் பாய் மொமண்ட்ஸ் எல்லாம் இருக்கும். அதெல்லாம் சரியாக டெலிவர் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
