சூர்யாவின் படங்கள்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு கருப்பு படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 46’. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியேறும் மயில்..
சூர்யா 47
கடந்த 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் பிடித்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ஆவேசம் இருந்தது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் சுஷின் ஷாம் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
