நடிகர் சிவகுமாரின் மகனாக சினிமாவில் அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளார் சூர்யா. இவருடைய 50வது பிறந்தநாள் இன்று. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் கருப்பு திரைப்படத்தின் First லுக் மற்றும் second லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டு போஸ்டர்களும் மிரட்டலாக உள்ளன.
பிறந்தநாள்
நேற்று இரவு தனது குடும்பத்துடன் கேக் வெட்டி தனது 50வது பிறந்தநாளை சூர்யா கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், சூர்யாவின் சொத்து மதிப்பு, அவருடைய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
நடிகராக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 350 கோடிக்கும் மேல் இருக்கும். இவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 40 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
கைகூடாமல் போன ரஜினியின் முதல் காதல்! யார் அந்த பெண் தெரியுமா.. நடிகர் கூறிய தகவல்
இதுவே சூர்யாவின் சொத்து மதிப்பு விவரம் ஆகும். ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. முன்னணி இணையதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
