சூர்யா
சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 – வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு ‘ரெட்ரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் மற்றும் வெப் தொடர் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ
மாஸ் அப்டேட்
தற்போது, சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 – வது படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து தற்போது, சூர்யா, லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 796CC என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாருதி கார்களின் முதல் எஞ்சின் எப்படி தயாரிக்கப்பட்டது என்பது குறித்த கதையாக இப்படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்ததால், ரசிகர்களுக்கு இப்படத்தின் மேல் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.