பிக் பாஸ் 8ம் சீசன் நிகழச்சி தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. தற்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் தற்போது வீட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களை பார்த்து போட்டியாளர்கள் அதிகம் எமோஷ்னல் ஆகி பேசுவதால் பிக் பாஸ் வீடு மொத்தமும் கண்ணீரில் கொஞ்ச நேரம் இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் அர்ச்சனா
குடும்பத்தினர் வந்து சென்ற நிலையில் அடுத்து பிக் பாஸில் போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் வர இருக்கிறார்களாம். அந்த வகையில் அருண் பிரசாத் காதலியான நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.
அவர் கடந்த சீஸனின் டைட்டில் வின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் வரும் காட்சிகள் நாளை வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது.