Home இலங்கை சமூகம் சுற்றுலாப் பயணியை ஏமாற்றி வடை விற்றவருக்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

சுற்றுலாப் பயணியை ஏமாற்றி வடை விற்றவருக்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

0

களுத்துறை(Kalutara) பிரதேசத்தில் சுற்றுலாப் பயணி ஒருவரை ஏமாற்றி வடை மற்றும் தேனீர் விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் சுற்றுலாப் பயணியை ஏமாற்றி கூடுதல் தொகைக்கு வடை மற்றும் தேனீர் விற்பனை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

இந்த காணொளி பகிர்வைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க – இந்திய உளவு விமானங்கள்

நீதிமன்றில் முன்னிலை

களுத்துறை பலாதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடை உரிமையாளர் கிடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி குறித்த நபர் பணம் பறித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் நாளைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். 

(தொடர்புடைய செய்தி)

இலங்கை சென்ற பெல்ஜியப் பயணிக்கு உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள அபராதத் தொகை: வெளியான அதிர்ச்சி தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

NO COMMENTS

Exit mobile version