Home முக்கியச் செய்திகள் போலி இலக்கத் தகடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜீப் வண்டி: சந்தேகநபர் கைது

போலி இலக்கத் தகடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜீப் வண்டி: சந்தேகநபர் கைது

0

கண்டி (Kandy) – தெல்தெனிய பிரதேசத்தில் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஜீப் வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (02)கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் குறித்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், குறித்த ஜீப் வண்டியில் இருந்த இலக்கத்தகட்டின் கீழ் மற்றுமொரு வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/suspect-arrested-jeep-with-fake-number-plates-1730646168?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version