Home இலங்கை குற்றம் யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) – கொழும்புத்துறை, வளம்புரத்தில் நீண்ட காலமாக போதை மாத்திரைகள்
விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் 20 போதை மாத்திரைகளுடன் நேற்றையதினம் (09)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/suspect-arrested-with-drug-in-jaffna-1739158698

NO COMMENTS

Exit mobile version