Home முக்கியச் செய்திகள் யாழில் புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான காணியை மோசடி செய்த நபர்:வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான காணியை மோசடி செய்த நபர்:வெளியான அதிர்ச்சி தகவல்

0

யாழில் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியை மோசடியான முறையில் விற்பனை செய்த நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழில் உள்ள தனது காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம்: பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலிப்பு

காணி மோசடி

குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய காணித் துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.  

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

பொருளாதார நெருக்கடியால் திணறும் எம்பிக்கள் : சொகுசு வாகனங்கள் விற்பனை

 புலம்பெயர் தமிழர்களின்  காணி கொள்வனவு

இந்நிலையில்,கைது செய்யப்பட்ட சந்தேகநபரை  நீதிமன்றில் முற்படுத்தியவேளை, விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் அதிகளவான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை கொள்வனவு செய்த நிலையில், மற்றுமொருவரின் கண்காணிப்பில் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இலக்கதகடுகளில் ஏற்படப்போகும் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version