கேகாலை போதனா மருத்துவமனை (கற்பித்தல்) மூத்த ஆலோசகர் வாய், தாடை மற்றும் முக நிபுணத்துவ (Oral and Maxillofacial)OMF) அறுவை சிகிச்சை நிபுணர் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 28 அன்று மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவ நிபுணர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
கர்ப்பிணிப் பெண்ணுடன் தொடர்பு கொண்டதாக தெரிவித்து தாக்குதல்
மருத்துவமனையில் உள்ள பாதையில் நடந்து செல்லும் போது நிபுணர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுடன் தற்செயலாக தொடர்பு கொண்டதாக தெரிவித்து ஒரு நபரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
சம்பவம் மருத்துவ நிபுணர்களிடையே சீற்றத்தைத் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை ஊழியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
மருத்துவ நிபுணர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டியைச்(kandy) சேர்ந்த 29 வயதுடையவர்.
காயமடைந்த சிறப்பு மருத்துவர் தற்போது கேகாலை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.