இலங்கையின் தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ரஞ்சன தரங்க திடீரென பதவியில்
இருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
ஒலிம்பிக் பங்கேற்பாளரும் நாட்டின் சிறந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளருமான
அவர், எந்த காரணமும் குறிப்பிடப்படாமல் கடந்த ஜூன் மாதத்தில் பதவியில்
இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் உள்ளக இடமாற்றத்துக்கு உள்ளானார்.
அவரது திடீர் இடமாற்றம் இந்த ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் மற்றும் உலக
செம்பியன்சிப் போட்டிகளுக்கான தயாரிப்புகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும்
வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
