Home முக்கியச் செய்திகள் யாழ். கலட்டிச் சந்தியில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

யாழ். கலட்டிச் சந்தியில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

0

யாழில் (Jaffna) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (09.09.2025) காலை யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த
நபரை மோதி விழுத்திவிட்டு அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு
அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்நிலையில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version