பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்டபூர்வமான மற்றும் பொறுப்புணர்வுள்ள அமைப்பு நிறுவப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வரி வாரத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மோசடியால் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை அகற்றுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியாக தனது சொந்த செலவினங்கள் முடிந்தவரை குறைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டிள்ளார்.
இதேவேளை, வரிப் பணம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், யாராவது அதை தவறாகப் பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஒவ்வொரு ரூபாயையும் பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசு நிறுவனங்களுக்குள் ஆழமாக வேரூன்றி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிதி துஷ்பிரயோக வலையமைப்பை அகற்ற வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி இந்த கட்டமைப்பை உடைக்கத் தவறினால், நாடு ஒரு அங்குலம் கூட முன்னேறாது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
