மேற்கிந்திய தீவுகள் நோர்த் சவுண்ட்(North Sound) மைதானத்தில் இன்று(22) நடைபெற்ற சுப்பர் 08 பிரிவு 01 இன் ஆட்டத்தில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது அதற்கமைய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி
அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா(Hardik Pandya )ஆட்டமிழக்காமல் 50,கோலி 37, ரிஷப் பண்ட்36 ஓட்டங்களை கூடுதலாக பெற்றனர்.
பந்து வீச்சில் தன்சிம் ஹசன் சகிப் மற்றும் ரிசாட் ஹொசைன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலளித்த பங்களாதேஷ்
பதிலுக்கு 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இந்திய பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 08 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அவ்வணி சார்பாக நஜ்முல் ஹொசைன் சான்ட்ரோ 40, தன்சிட் ஹசன்29 ஓட்டங்களை பெற்றனர்.
ஆட்டநாயகன்
பந்துவீச்சில் குல்திப் யாதவ் 03,பும்ரா மற்றும் அர்தீப் சிங் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக 50 ஓட்டங்கள் மற்றும் ஒரு விக்கெட்டை கைப்ப்றிய ஹர்திக் பாண்ட்யா தெரிவானார்.