Home இலங்கை அரசியல் தனது அவுஸ்திரேலிய குடியுரிமை தொடர்பில் டில்சான் வெளியிட்ட தகவல்

தனது அவுஸ்திரேலிய குடியுரிமை தொடர்பில் டில்சான் வெளியிட்ட தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.டில்சான் (T.M. Dilshan) தாம், தமது இரட்டைக் குடியுரிமையை கைவிடவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டில்சான், இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு தகுதி பெறுவதற்காக தனது அவுஸ்திரேலிய குடியுரிமையை துறந்தமையை உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது குடியுரிமை அந்தஸ்து தொடர்பான வதந்திகளுக்கு பதிலளித்த டில்சான், தாம் வெற்றிக்கு பயந்து தமது குடியுரிமையை துறக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தல் சட்டங்கள்

நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவினால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியில் இணைந்து டில்சான் போட்டியிடுகிறார்.

நாட்டின் தேர்தல் சட்டங்களின்படி வேட்பாளர்கள், இலங்கைக் குடியுரிமையை மாத்திரமே பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version