Home முக்கியச் செய்திகள் ரி20 உலகக் கோப்பை 2024: இதுவரையில் முறியடிக்கப்பட்டுள்ள சாதனைகள்

ரி20 உலகக் கோப்பை 2024: இதுவரையில் முறியடிக்கப்பட்டுள்ள சாதனைகள்

0

2024 ஆம் ஆண்டு ரி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா (USA) மற்றும் மேற்திந்திய தீவுகள் (West Indies) போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில், 20 நாட்கள் முடிந்துள்ள இந்த தொடரில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அறிவித்தள்ளது.

குறித்த தொடரில் பல போட்டிகள் ரசிகர்களுக்கு சோர்வை கொடுத்ததாக கூறப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சாதனைகள் இந்த தொடரில் முறியடிக்கப்பட்டுள்ளன.

அதிக விக்கெட்டுகள்

அதன்படி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சிறிலங்கா வீரர் லசித் மலிங்கவை (Lasith Malinga) பின்தள்ளி (94 விக்கட்டுகள்), உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகனை (95 விக்கட்டுகள்) வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) படைத்துள்ளார்.

இதேபோன்று, சர்வதேச ரி20 போட்டிகளில் ஒரு ஓவரில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக யுவராஜ் சிங் (Yuvraj Singh) பெற்ற 36 ஓட்டங்கள் இருந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய வீரர் நிக்கோலஸ் பூரான் (Nicholas Pooran) 36 ஓட்டங்களை ஒரே ஓவரில் பெற்று அந்த சாதனையை படைத்துள்ளார்.

ஏழாவது வீரர்

மேலும், பிரட்லி (Brett Lee), கேம்பர், வனிந்து ஹசரங்க (W. Hasaranga), ரபாடா, கார்த்திக் மெய்யப்பன்,ஜோஸ் லிட்டில் ஆகியோரை தொடர்ந்து ரி20 உலக கோப்பை வரலாற்றில் ஹெட்ரிக் எடுத்த ஏழாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் (Australia) பட் கம்மின்ஸ் (Pat Cummins) பெற்றுள்ளார்.

அத்துடன், கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் (Aaron Jones) ஒரு இன்னிங்ஸில் 10 சிக்ஸர்கள் விளாசி கெயிலின் சாதனையை சமன் செய்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version