Home இலங்கை அரசியல் முன்னாள் அமைச்சர் சம்பிக்க அரசாங்கத்திற்கு விடுத்துள்ள சவால்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க அரசாங்கத்திற்கு விடுத்துள்ள சவால்

0

 அரகலய போராட்டத்தின் போது வீடுகளுக்கு தீ மூட்டிய நபர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த தாக்குதல்களில் வீடுகளை புனரமைப்பதற்கு நட்டஈடு பெற்றுக்கொண்டவர்கள் குறித்த விபரங்களை அரசாங்கம் வாராந்தம் வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், வீடுகளை எரித்தவர்கள் பற்றிய விபரங்கள் எதனையும் அரசாங்கம் இதுவரையில் வெளியிடவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பட்டியலை வெளியிட்டால் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அம்பலமாகும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியல் பொலிஸ் மா அதிபரின் கைவசம் காணப்படுவதாகவும் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு அவைத் தலைவர் பிமல் ரட்நாயக்கவிடம் கோருவதாகவும் அவர் கோரியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version