நுவரெலியா (Nuwara eliya) ஸ்கிராப் தோட்டத்தில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை
அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை (27) உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
மே தினத்தன்று கல்முனை மாநகர பொதுச் சந்தை பூட்டு
பொலிஸ் விசாரணை
பாட்டியின் முழுமையான அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி
கடந்த (25) ஆம் திகதி பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் பாட்டி பயன்படுத்தி
வந்த இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் சிறு வயதில் உயிரிழந்த நிலையில் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து நானுஓயா பிரதேசத்தில் தனியாக வாழ்ந்து
வந்துள்ளார்.
எனினும் சிறுமி உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் தந்தையை தேடி பிரேத பரிசோதனையின்
பின் சடலம் நேற்று (29) தந்தையிடம் ஒப்படைக்கப்படுள்ளது.
மேலும் உயிரிழந்த சிறுமி இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை தானாகவே அதிக அளவில் உட்கொண்டாரா ?
அல்லது வேறு யாரேனும் அவருக்குத் தெரியாமலேயே அதிக அளவில் மாத்திரைகளை
கொடுத்தனரா ? என்ற பல கோணத்தில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
அம்பாறையில் உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |