Home இலங்கை அரசியல் ஏறாவூருக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய தூதுவர்! முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

ஏறாவூருக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய தூதுவர்! முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

0

Courtesy: Nilavan

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ற காணிகள் இன்றி மக்கள் தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா (Alizahir Maulana) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் அன்ரூ பற்றிக் (Andrew Patrick) உடன் இன்று (30.04.2024) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பின் போது, பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் அலிஸாஹிர் மௌலானா நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்து அதில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடி இருந்தார்.

தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான அதிகரிப்பு

மகஜர் கையளிப்பு  

குறித்த மகஜரில், “மிக முக்கிய பிரச்சினையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினரின் சனத்தொகை வளர்ச்சி மற்றும் அதற்கு ஏற்ப காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. 

மேலும், கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளை 24 வருடங்கள் தாண்டியும் இதுவரை வழங்கப்படவில்லை. 

இது இஸ்லாமியர்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.

அதேவேளை, ஏறாவூர் நகர சபையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் திடீர் உயர்வு! இன்று பதிவான மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version