Home இலங்கை அரசியல் இந்திய உயர் ஸ்தானிகர் – நாமல் இடையே சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர் – நாமல் இடையே சந்திப்பு

0

இலங்கைக்கான இந்திய (India)  உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) , மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (16.01.2025) இடம்பெற்றுள்ளது.

இந்தியா – இலங்கை

இந்த சந்திப்பின் போது இந்தியா – இலங்கை (Sri Lanka)இடையேயான பன்முகத்தன்மை கொண்ட பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள், முதலீடுகள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற துறைகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக உயர் ஸ்தானிகர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவும் வலுவான உறவைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து விவாதித்ததாக நாமல் ராஜபக்ச தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version