Home இலங்கை அரசியல் மகிந்தவுடன் அவசர மந்திராலோசனைக்கு தயாராகும் அரசியல்வாதிகள்

மகிந்தவுடன் அவசர மந்திராலோசனைக்கு தயாராகும் அரசியல்வாதிகள்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய மற்றொரு குழு, அடுத்த வாரம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஒரு வலுவான அரசியல் முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகிந்தவின் அழைப்பின் பேரில் இந்த சிறப்பு சந்திப்பு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒரு குழுவாக ஒன்றிணைக்கும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.


சாதகமான முடிவுகள்

இது தொடர்பில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்று கலந்துரையாடலின் போது சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

மேலும் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறிய 20க்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வலுவான கூட்டணி

இரு பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடுகளை களைந்து, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒரே அணியாக போட்டியிட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மற்றுமொரு வலுவான கூட்டணியை ஏற்படுத்தும் தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version