Home இலங்கை அரசியல் ராஜபக்சர்கள் மாத்திரமல்ல அனைத்து கள்வர்களும் பிடிபடுவர்! அநுர அரசாங்கம் சூளுரை

ராஜபக்சர்கள் மாத்திரமல்ல அனைத்து கள்வர்களும் பிடிபடுவர்! அநுர அரசாங்கம் சூளுரை

0

அனைத்து கள்வர்களையும் பிடிப்போம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சூளுரைத்துள்ளது.

இந்த விடயத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தங்கம் கடத்தல் 

அவர் மேலும் கூறுகையில், “மகிந்த ராஜபக்சர்கள் மாத்திரமின்றி அனைத்து கள்வர்களும் பிடிக்கப்படுவர். 

அரசாங்கம் கள்வர்களை பிடிப்பதற்கு முனைப்பு காட்டும் போது சஜித், நாமல், விமல் வீரவன்ச போன்றவர்கள் அதனை தடுக்க முயற்சிக்கின்றனர். 

தற்பொழுது அவர்கள் ஒன்றிணைந்து கொண்டுள்ளனர். துறைமுகத்திலிருந்து தங்கம் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

அவ்வாறான தங்க கடத்தல்கள் கொள்கலன் ஊடாக இடம்பெறவில்லை எனவே இது தொடர்பில் விசாரணை நடத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version