Home இலங்கை அரசியல் அரசியல் தளத்தின் மாற்றம்! இலக்குகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு

அரசியல் தளத்தின் மாற்றம்! இலக்குகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு

0

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.   

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறிய சிவஞானம் மேலும் குறிப்பிடுகையில்,

“தற்போது கடந்த காலங்களைப் போல் அல்லாது அரசியல் தளம் மாற்றமடைந்துள்ளது.

இது தமிழ் தரப்பினரின் அரசியல் களத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தமிழ் அரசியல் புலம் சார்ந்த கட்சிகள் கைப்பற்றவேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த நிலையில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள், கொள்கைகள், பாதைகள் வேறு வேறாக இருந்தாலும் தங்களின் நிலைப்பாடுகளில் இருந்துகொண்டு ஒன்றிணைவது அவசியமாகும்” என்றார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

மேலதிக தகவல் – கஜி

NO COMMENTS

Exit mobile version