அரசியலுக்கு அப்பால் மக்களின் சேவைகளை முன்னெடுப்பதற்கு விரைவில் தமிழரசு
தொடர்பகம் திறக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (4) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தை பார்வையிட்ட
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு அரசியல் கட்சியாக வெ்வேறு விதங்களில் நாம் மக்களுக்கு சேவையாற்ற முடியும்.
மக்களுக்கு சேவை
தேர்தல்களிலே போட்டியிடுவது மட்டுமல்ல எங்களுடைய பிரதிநிதிகள் வெவ்வேறு சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றபோதும் அங்கேயும் சேவை செய்வார்கள்.
அத்தோடு, தற்போது நாம் ஆரம்பித்துள்ள இந்த நிகழ்ச்சி எமது மற்றைய காரியாலயங்களிலும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
