Home இலங்கை அரசியல் திருகோணமலையில் கைதான தமிழ் வர்த்தகர்

திருகோணமலையில் கைதான தமிழ் வர்த்தகர்

0

திருகோணமலை (Trincomalee) மூதூரில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் கொடுத்த தமிழ் வர்த்தகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபா பணம் வழங்கிய 26 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரிய முல்லை பாலத்திற்கு அருகிலுள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து பணம் வழங்குவதாக கிடைத்த தகவலுக்கு அமைய காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.

மேற்கொண்ட விசாரணை

இதன்போது மேற்கொண்ட விசாரணையை அடுத்து குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக மூதூர் காவல்ததுறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version