Home இலங்கை அரசியல் ஆரம்பமே குழப்பகரமான நிலையில் தமிழ் பொது வேட்பாளர் விடயம்

ஆரம்பமே குழப்பகரமான நிலையில் தமிழ் பொது வேட்பாளர் விடயம்

0

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு பின்னால் தமிழ் பொதுக் கட்டமைப்பு உள்ளது.

இந்த தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பே சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து செயற்படும் எனவும் அதற்கான ஒரு மக்கள் ஆணையாகத் தான் பொதுவேட்பாளர் என்ற விடயம் கையாளப்படுகின்றது எனவும் கூறப்பட்டது.

இதற்கு ஏற்றாற்போல் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ்த் தேசிய சிவில் அமைப்புகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினரை சந்திப்பதற்கு ஒதுக்கிய நேரத்தில் அந்த சந்திப்பிற்கு சிவில் தரப்புக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் செல்லவில்லை.

எனினும், ஒரு பகுதி அரசியல் தரப்பினர் மாத்திரம் அந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் கூட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினரால் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்படவில்லை.

எனில் இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவினை எடுப்பார்கள்?

ஆரம்பமே இவ்வளவு குழப்பகரமாக உள்ள நிலையில், பொது வேட்பாளருக்கு தமிழ்க் கட்சிகளுடைய ஆதரவு இருக்குமா இல்லையா?

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version