Home முக்கியச் செய்திகள் தமிழ் பொதுவேட்பாளர் : ஜெய்சங்கருக்கு முன்னால் முட்டிமோதிய சிறீதரன் மற்றும் சுமந்திரன்

தமிழ் பொதுவேட்பாளர் : ஜெய்சங்கருக்கு முன்னால் முட்டிமோதிய சிறீதரன் மற்றும் சுமந்திரன்

0

 இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடனான(Dr. S. Jaishankar) சந்திப்பின்போது எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்ததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 

இந்திய வெளியுறவு அமைச்சர், தனது இலங்கை விஜயத்தின் போது கடந்த வியாழக்கிழமை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சேர்ந்த எட்டு பேரை சந்தித்தார்.

தமிழ் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு

இதன்படி தமிழ் கட்சி பிரதிநிதிகளான சி.வி. விக்னேஸ்வரன்(C.V. Vigneswaran) செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah Gajendran), தர்மலிங்கம் சித்தார்த்தன்( Dharmalingam Sithaththan), செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikkalanadan) எம்.ஏ. சுமந்திரன்(M.A. Sumanthiran), சிறீதரன்(S. Sritharan),சாணக்கியன்(ShanakiyanR )மற்றும் மாவை சேனாதிராஜா(Mavai Senathirajah) ஆகியோரை சந்தித்தார்.

தமிழ் பொதுவேட்பாளர்

இதன்போது சி.வி. விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெற்கில் போட்டியிடும் எந்தவொரு பிரதான வேட்பாளரையும் ஆதரிப்பதற்குப் பதிலாக பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் விளக்கினர்.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவை வெளியிட்டபோது அந்த கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version