Home முக்கியச் செய்திகள் வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரம்

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரம்

0

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ப.அரியநேத்திரன் (P. Ariyanethran) வவுனியாவில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இன்று (04) வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள பண்டார வன்னியனின் சிலைக்கு முன்பாக மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு தனது பிரசார பணிகளை ஆரம்பித்தார்.

இதன் பின்னர்
வவுனியா – இலுப்பையடிப் பகுதியில் உள்ள வீதியோர வியாபாரிகள் மற்றும்
பொதுமக்களிடம் தனது பிரசார செயற்பாட்டை முன்னெடுத்திருந்தார்.

பிரசார நடவடிக்கை

இதேவேளை பிரசார நடவடிக்கைகளில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ப.துளசி, வவுனியா
தாயகம் அமைப்பின் தலைவர் மாணிக்கம் ஜெகன் உட்பட பல ஆதரவாளர்களும் கலந்து
கொண்டனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version