Home இலங்கை அரசியல் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு

தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு

0

பழைய பௌத்த பேரினவாத சிந்தனைகளோடும், பிக்குமாரின் வார்த்தைகளுக்குள் கட்டுண்டு நிற்கும் அரசியலை தென்னிலங்கை அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் செயற்படுத்தினால், நாட்டின் முன்னேற்றம் என்ற இலக்கை அடைய முடியாது என, நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தென்னிலங்கை அரசியல்வாதிகள் இன்று வரை இன நல்லிணக்கம் என்ற விடயத்தை கையிலெடுக்கவில்லை.

பொதுவேட்பாளர் விடயம்

இதன் காரணமாகவே தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தை கையிலெடுத்துள்ளோம்.

உதாரணமாக சொல்லப்போனால், தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு ஒற்றுமைக்கு பிரதான காரணமானவர்கள் கிழக்கிலங்கை பத்திரிகையாளர்களே.

அவர்களின் முழு முயட்சியின் விளைவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு விடயம்.

பத்திரிகையாளர்களின் முயற்சி

அதில் முக்கியமான பங்காளர்களாக, தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள அரியநேத்திரன், பத்திரிகையாளர் தராகி சிவராமன், நடேசன், நீராஜ் டேவிட் ஆகியோர் காணப்படுகின்றார்.

அந்த பத்திரிகையாளர்களின் முயற்சி வெற்றி பெற்றதல்லவா. அதோ போன்றுதான் சிவில் சமூகம் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளரை நிலைநிறுத்தியுள்ளது.

இதன் முடிவை இன்றே குறிப்பிட முடியாது. தேர்தலின் பின்னர் இந்த விடயம் வெற்றியடைந்தால் வரலாற்றில் இடம்பிடிக்கும். நல்லிணக்கம் என்ற ஒரு விடயம் தானான வந்தடையும்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version