Home இலங்கை அரசியல் சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களில் ஒன்று பட்டுள்ளோம்: தமிழ் பொதுக் கட்டமைப்பு

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களில் ஒன்று பட்டுள்ளோம்: தமிழ் பொதுக் கட்டமைப்பு

0

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் மனங்களில் நாங்கள் அனைவரும்  ஒன்று பட்டுக் கொண்டிருக்கின்றோம் என தமிழ் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர் வசந்தராஜா (Vasantharaja) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) – அம்பிளாந்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரனின் (P. Ariyanethiran) இல்லத்தில் இன்று (23.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய பொது கட்டமைப்புஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

தமிழ் மக்களின் இனப் பிரச்சனை

அதில் தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினைகளை இன்று பொறுப்பெடுக்கின்ற புதிய அரசும் சர்வதேசமும் நிச்சயமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுகிறோம்.

அதேவேளை பொது கூட்டமைப்பினால் நிறுத்தப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் இன்று சிதைந்து கிடந்த தமிழினத்தை, பிரிந்து கிடந்த தமிழ் தேசிய பரப்பிலேயே பணி புரிகின்ற அரசியல் கட்சிகளை, ஒன்றிணைத்த ஒரு பெரும் கைங்கரியத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

தமிழ் மக்கள் 

இன்று தமிழ் மக்கள் இரண்டு இலட்சத்தி 26 ஆயிரம் வாக்குகளை அவருக்கு செலுத்தி வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக இணைத்து இருக்கின்ற ஒரு நிலைமையை கொண்டிருக்கின்றது.

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே மக்கள் அனைவரும் நாங்கள் ஒன்றுபட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பதை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

இந்த தேர்தல் அறிக்கைகளை குறிப்பிடப்பட்ட விடயங்களை நிச்சயமாக இந்த அரசும் சர்வதேசமும் பொறுப்பெடுத்து கவனத்தில் கொண்டு அதனை தீர்க்காமல் விடுவார்களாக இருந்தால் எதிர்காலத்திலே இந்த அரசு எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்த அளவிற்கு மாற்றம் வரும் என்று நாம் கருத முடியாது இருக்கிறது ஆகவே இந்த அரசை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று என்று கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10

Source: https://ibctamil.com/article/tamil-general-structure-north-east-people-1727100111

NO COMMENTS

Exit mobile version