Home முக்கியச் செய்திகள் தமிழினப்படுகொலை வாரம் : யாழில் இருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி

தமிழினப்படுகொலை வாரம் : யாழில் இருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி

0

புதிய இணைப்பு

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு
முன்பாக ஆரம்பமான ஊர்திப்பவனி நேற்று (15) கிளிநொச்சியை (Kilinochchi) சென்றடைந்தது.

இதன்போது பரந்தன்,
கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

குறித்த ஊர்திப்பவனி வடக்கைச் சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக
முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

தமிழினப்படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) – நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்று (14) குறித்த பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகமெங்கும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் அஞ்சலி

இந்த நிலையில் இந்த
ஊர்திப்பவனி யாழில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை
சென்றடையவுள்ளது.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை,
சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய
பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,
வீதிகளில் பயணித்த பொதுமக்கள் குறித்த நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவளை தமிழ்தேசிய மக்கள் முன்னனியின் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

NO COMMENTS

Exit mobile version