Home ஏனையவை ஜோதிடம் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்… சற்று கவனத்துடன் இருப்பது நல்லது!

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்… சற்று கவனத்துடன் இருப்பது நல்லது!

0

இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி).

இன்று காலை 06.32 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
அஸ்தம் சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

வியாபாரத்தில் வெற்றி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சண்டை சச்சரவுகளிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. வேலைப்பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிறிய சிறிய மருத்ததுவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவீர்கள். மருத்துவ பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. மனசங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு எதிரிகளின் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றலாம்.

அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க இயலாதவர்கள் இதை வாங்கலாம்!

கடகம்

வர்த்தகத்தில் லாபம் ஏற்படும்.சிறிய மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வேலை செய்யுமிடத்தில் பாராட்டப்படுவீர்கள். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். பண வரவு கிடைக்கும் நாளாக அமையும்.

சிம்மம்

தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்த்து உயரும். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபம் ஏற்படும்.
பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கன்னி

உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சிறிய மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்

வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.அவசர தேவைகள் ஏற்படும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சந்திராஷ்டம நாள் ஆகையால் கவனம் தேவை.

விருச்சிகம்

பண உதவி கிடைக்கும்.வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

தனுசு

தூக்கத்தை இழக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் தடுமாற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசாங்க ஊழியர்கள் வேலை விடயத்தில் கவனம் தேவை.

மகரம்

வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். சின்னத் தொல்லைகள் நீங்கும். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு ஏற்படும். நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்

பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கவலையால் தவிப்பீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கத்தைக் இழப்பீர்கள். நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். தொழிலை சுமூகமாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் விருப்பத்திற்கு மாறாக ஏற்ற இறக்கமான லாபம் பெறுவீர்கள்.

மீனம்

புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனை அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version