Home சினிமா ஜெமினி மேன் படத்திற்கு முன்பே Clone வைத்து தமிழ் படம் வந்துவிட்டதா? ஹீரோ யார் தெரியுமா

ஜெமினி மேன் படத்திற்கு முன்பே Clone வைத்து தமிழ் படம் வந்துவிட்டதா? ஹீரோ யார் தெரியுமா

0

GOAT

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தில் Clone-ஆக தளபதி விஜய் வந்ததை இயக்குனர் வெங்கட் பிரபு தெளிவாக விளக்கவில்லை என விமர்சனங்கள் இருக்கிறது.

Clone 

ஆனால், மற்றொரு புறம் Clone குறித்து வந்த காட்சி வேற லெவல் என்றும் பார்ப்பட்டு வருகிறது.

இந்த Cloning விஷயத்தை ஹாலிவுட்டில் வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ஜெமினி மேன் படத்தில் பயன்படுத்தி இருந்தனர்.

ஜெமினி மேன்

ஏஜென்ட் ஆக இருக்கும் கதாநாயகன் வில் ஸ்மித்தின் DNA-வை வைத்து Genetic copy செய்து மற்றொரு வில் ஸ்மித்தை Clone-ஆக உருவாக்கி இருந்தனர். Clone-க்கும் கதாநாயகனுக்கும் இடையே நடக்கும் ஆக்ஷன் காட்சிகளை விறுவிறுப்புடன் ஜெமினி மேன் படத்தில் காட்டியிருந்தார்.

தமிழகத்தில் GOAT படம் 5 நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா

ஆனால், ஹாலிவுட் படத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் Clone குறித்து படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ஜெமினி மேன் படத்தில் எப்படி கதாநாயகனின் DNA-வை Genetic copy செய்து Clone-ஐ உருவாக்கினார்களோ, அதே போல் தமிழில் 2007ல் வெளிவந்த படத்திலேயே Clone விஷயத்தை படத்தின் மையக்கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரி 

அது வேறு யாருமில்லை எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான வியாபாரி திரைப்படம் தான். ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, தமன்னா, சீதா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் வியாபாரி.

இப்படத்தில் கதாநாயகன் எஸ்.ஜே. சூர்யாவால் தனது பிசினஸ் மற்றும் வீடு இரண்டு இடங்களிலும் தன்னால் நேரத்தை செலவிட முடியாது என்பதால், பிசினஸை நான் பார்த்து கொள்கிறேன், வீட்டை பார்த்துக்கொள்ள தன்னை போலவே ஒரு Clone-ஐ விஞ்ஞானி உதவியின் மூலம் உருவாக்குவார். இது தான் அப்படத்தின் கதையாகும்.  

NO COMMENTS

Exit mobile version